கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
கேரளம்:
கேரளத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 87 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 47 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதுதவிர இடுக்கியிலிருந்து 2 பேர், கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,540 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,747 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,734 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,399 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,730 பேர் குணமடைந்துள்ளனர், 3,523 பேர் சிகிச்சையில் உள்ளனர் மற்றும் 142 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.