முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு இன்று மேலும் 2 காவலர்கள் பலி, 190 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் கரோனாவால்இன்று மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கரோனாவால்இன்று மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். 

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4.90 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 1,47,741 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களில் 77,453 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6,931 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று கரோனாவுக்கு மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் இன்று புதிதாக 190 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 3,444 காவலர்கள் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரத்தை பொறுத்தவரையில் இதுவரை 4,516 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 56 காவலர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.