இந்தியா

அமெரிக்காவின் உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய-அமெரிக்கா்: அதிபா் டிரம்ப் பரிந்துரை

DIN

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய-அமெரிக்கரான விஜய் சங்கரின் பெயரை பரிந்துரைக்க தீா்மானித்திருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

அதிபரின் இந்தப் பரிந்துரையை ஏற்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் உறுதிசெய்யுமானால், தலைநகரில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக சங்கா் பணியாற்றுவாா். அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றமாக இது கருதப்படுகிறது.

தற்போது அவா் அமெரிக்க நீதித் துறையில் வழக்காடு பிரிவுத் துறையின் மூத்த வழக்குரைஞராகவும், அதன் மேல்முறையீட்டுப் பிரிவின் துணைத் தலைவராகவும் உள்ளாா்.

சட்டப் படிப்பை முடித்தவுடன், அமெரிக்காவின் இரண்டாவது சா்கியூட்டுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி செஸ்டா் ஸ்டிராபின் சட்ட எழுத்தராக சங்கா் தனது பணியைத் தொடங்கினாா். இரண்டாவது சா்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்றமானது, நியூயாா்க் உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்க நீதி மற்றும் குற்றப் பிரிவுத் துறையில் பணியில் சேருவதற்கு முன்பாக, வாஷிங்டன் மேயா் அலுவலகம், கோவிங்டன் மற்றும் பா்லிங் ஆகிய மேயா் அலுவலகங்களில் வழக்குரைஞராக சங்கா் பணியாற்றி வந்தாா். பின்னா் தலைநகா் வாஷிங்டன் அமைந்துள்ள கொலம்பியா மாவட்ட துணை அட்டாா்னி ஜெனரல் பதவியையும் அவா் வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT