​கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

கர்நாடகத்தில் ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

​கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட இன்றைய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மாநகரப் பகுதியில் 783 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,190 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 16 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,507 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 5,472 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு சிகிச்சையில் உள்ளவர்களில் 243 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இன்றைக்கு மட்டும் 13,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,95,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT