இந்தியா

இந்தியாவில் கரோனாவில் இருந்து பொது இடங்களை பாதுகாக்க இஸ்ரேல் கிருமிநாசினி

DIN


ஜெருசலேம்: கரோனா நோய்த்தொற்றில் இருந்து விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட  பொதுஇடங்களைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேலிய கிருமிநாசினியை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இதுகுறித்து "ஜெருசலேம் போஸ்ட்' நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த கிருமிநாசினி, எதிரி நாடுகளின் கிருமி ஆயுதங்களை (பயோவார்ஃபேர்) அழிப்பதற்காக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தயாரித்து வைத்துள்ள திரவமாகும். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் நேரடி கண்காணிப்பில், "இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயாலஜிகல் ரிசர்ச்'(ஐஐபிஆர்) என்ற ஆய்வு நிறுவனம் இந்த கிருமிநாசினியை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம், கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து ஆய்விலும் ஈடுபட்டு வருகிறது.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கிருமிநாசினியை, டெரா நாவல் என்னும் இஸ்ரேலிய நிறுவனம் விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனம், சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள ஷிவா இன்னோவேஷன்ஸ் பயோடெக் நிறுவனத்திடம் இந்த கிருமிநாசினியை வழங்கவுள்ளது. இந்த கிருமிநாசினியை விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெளித்து கரோனா கிருமிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஒரு இடத்தில் இந்த கிருமிநாசினியை தெளிக்கும்போது கரோனா உள்ளிட்ட வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை அங்கிருந்து 100 சதவீதம் அழிக்கப்படும். மேலும், அந்த இடத்தில் கிருமிகள் தஞ்சமடைவதும் தடுக்கப்படும். இஸ்ரேலில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலமுறை பயன்படுத்தி, வெற்றி கண்ட பிறகே இந்தியாவுக்கு அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது என்று ஜெருசலேம் போஸ்ட் நாளிதழில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT