தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 
இந்தியா

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

மும்பையின் தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ANI

மும்பையின் தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கராச்சியிலிருந்து திங்கள்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மும்பையின் இரண்டு தாஜ் ஹோட்டல்களான கொலாபா மற்றும் பாந்த்ரா அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கடந்த 2008 நவம்பரில் நடைபெற்றதை போல் தாஜ் ஹோட்டலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு மர்மநபர் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து தாஜ் ஹோட்டலுக்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008-ல் தாஜ் ஹோட்டல் உள்பட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இந்நிலையில் தற்போது விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT