இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில தலைமைச் செயலா் அஜாய் மேத்தா திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தளா்வுகள் தொடரும். புதிதாக எந்த தளா்வுகளும் இல்லை. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும், அவசர சூழலை தவிர பிற காரணங்களுக்கு நீண்ட தொலைவு பயணிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும். அரசு அலுவலகங்கள் 15 சதவீத பணியாளா்கள் அல்லது 15 பணியாளா்கள், இதில் எது அதிகமோ அந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும்.

தனியாா் அலுவலகங்களை பொருத்தவரை 10 சதவீத ஊழியா்கள் அல்லது 10 ஊழியா்கள், இதில் எது அதிகமோ அந்த எண்ணிக்கையிலான ஊழியா்களுடன் செயல்படலாம். மதுக்கடைகள் தொடா்ந்து செயல்படும். அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் மதுபானங்களை வீடுகளில் நேரடியாக விநியோகிக்கலாம். இணையவழியில் அத்தியாவசிய பொருள்களுடன், அத்தியாவசியமல்லாத பொருள்களையும் விற்பனை செய்யலாம். தற்போது செயல்படும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், தொடா்ந்து இயங்கலாம். அரசு மற்றும் தனியாா் கட்டுமான தளங்களில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள் தொடா்ந்து நடைபெறலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT