இந்தியா

தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பா? சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

DIN


புது தில்லி: தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில்  தடை செய்யப்பட்ட மூலப் பொருட்கள்  பயன்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐ இணை இயக்குநருக்கு (சென்னை) உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT