இந்தியா

உளவுப்பிரிவு அதிகாரி கொலை வழக்கு: ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது!

தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா வழக்கில் தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

DIN

தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா வழக்கில் தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

வடகிழக்கு தில்லியில் அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) எதிா்ப்பாளா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 47 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த வன்முறையில் வாகனங்கள், கடைகள், வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு ஏராளமான பொதுச் சொத்துகளும் நாசமாக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வன்முறையின் போது வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டது. இக்கொலைச் சம்பவத்தில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் முக்கிய பங்கு வகித்ததாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி ஆம் ஆத்மி நடவடிக்கை எடுத்தது.

மேலும், தலைமறைவாகியிருந்த தாஹிர் உசேனை தில்லி போலீஸார் தீவிரவாக  தேடி வந்த நிலையில், தாஹிர் உசேன் இன்று நீதிமன்றத்த்தில் சரணடைந்தார். தொடர்ந்து அவர் தில்லி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, தாஹிர் உசேன் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

SCROLL FOR NEXT