கோப்புப்படம் 
இந்தியா

ராணா கபூரிடம் ரூ.2 கோடிக்கு ராஜீவ் காந்தியின் ஓவியம் விற்பனை: விசாரணை வளையத்துக்குள் பிரியங்கா

ராஜீவ் காந்தியின் ஓவியத்தை ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா வதேராவிடம் இருந்து ராணா கபூர் வாங்கியிருப்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த உள்ளது.

DIN


புது தில்லி: ராஜீவ் காந்தியின் ஓவியத்தை ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா வதேராவிடம் இருந்து ராணா கபூர் வாங்கியிருப்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஓவியர் எம்.எஃப் ஹுஸைன் வரைந்த ராஜீவ் காந்தியின் ஓவியத்தை பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த பணத்தை பிரியங்கா ஷிம்லாவில் ஒரு காட்டேஜ் வாங்க செலவிட்டுள்ளார். இது பணமோசடி வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓவியத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்த விவகாரத்தில் பிரியங்கா மற்றும் ராணா கபூர் தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் காசோலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஓவியத்தை விற்பனை செய்ததில், பிரியங்காவுக்கு உதவியதாகக் கூறப்படும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மிலிந்த் தியோராவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT