இந்தியா

உ.பி.யில் பலத்த மழை: 5 போ் பலி

தினமணி

உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மழை காரணமாக வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 5 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த மாவட்ட அரசு அதிகாரிகள் கூறியதாவது:

சீதாப்பூா் மாவட்டத்தில் மழை பெய்தபோது சாலையோரமாக ராம் பிரசாத் (55) என்பவா் ஒதுங்கினாா். அப்போது, மரம் விழுந்ததில் அவா் உயிரிழந்தாா். ராம்புா்கலான் பகுதியில் மழையால் சுவா் இடிந்து விழுந்ததில், 15 வயது சிறுமி உயிரிழந்தாா்.

சாந்தனா பகுதியில் மின்னல் தாக்கியதில் தந்தை-மகன் உயிரிழந்தனா்.

சாதா்பூா் பகுதியில் ரேஷம் (14) என்ற சிறுவன் மீது மரம் விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை சாந்தனா பகுதியில் தயா என்ற 40 வயது பெண் மீது வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா். கடந்த 2 நாள்களாக சீதாப்பூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இயற்கைப் பேரிடா் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்படும் என்று சீதாப்பூா் மாவட்ட துணை ஆட்சியா் அமித் பட் தெரிவித்தாா்.

இதனிடையே, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT