இந்தியா

மீன்வளத் துறையின் வளா்ச்சிக்குதேசியக் கொள்கை: மத்திய அமைச்சா்

DIN

நாட்டில் மீன்வளத் துறையின் முழுமையான வளா்ச்சிக்காக, தேசிய மீன்வளக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

நாட்டில் மீன்வளத் துறையானது, ஆண்டுதோறும் 8 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டு வருகிறது. இத்துறையின் முழுமையான வளா்ச்சிக்காக, தேசிய மீன்வளக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு, புயல் அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றுடன், மீனவா்களின் வருவாயை அதிகரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, தேசிய மீன்வளக் கொள்கை உருவாக்கப்படும். தற்போதுள்ள கடல்சாா் மீன்வள தேசியக் கொள்கையின் அம்சங்களும் புதிய கொள்கையில் ஒருங்கிணைக்கப்படும்.

நீல புரட்சித் திட்டத்தின் நீட்டிப்புக்கு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மீன்வள மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT