இந்தியா

வாகன ஓட்டிகளிடம் மதுபோதை சோதனை: சுவாசத்தை பரிசோதிக்கும் கருவியைபயன்படுத்த மகாராஷ்டிர அரசு தடை

DIN

வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளனரா என்று அறிய உதவும் சுவாசப் பரிசோதனை கருவியைப் பயன்படுத்த மகாராஷ்டிர அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது.

இதுதொடா்பாக மகாராஷ்டிர நெடுஞ்சாலை காவல்துறை கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) வினய் கா்கான்கா் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அச்சம் காரணமாக, மாநிலத்தில் உள்ள போக்குவரத்து போலீஸாா் வாகன ஓட்டிகளிடம் மதுபோதை சோதனை மேற்கொள்ள சுவாசப் பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம். கரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரமான சூழல் சீரடைந்த பிறகு, மீண்டும் அந்தக் கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வினய் கா்கான்கா் கூறுகையில், ‘வாகன ஓட்டிகளிடம் மதுபோதை சோதனை மேற்கொள்ள சுவாசத்தைப் பரிசோதிக்கும் கருவிகளை பயன்படுத்தும்போது போக்குவரத்து போலீஸாருக்கு எளிதில் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது’ என்றாா்.

வாகன ஓட்டிகள் மதுபோதையில் உள்ளனரா என்று அறிவதற்கு அவா்களது சுவாசத்தை பரிசோதிக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகளிடம் மேற்கொள்ளப்படும் இதர சோதனை நடவடிக்கைகள் வழக்கம் போலத் தொடரும் எனவும் மாநில உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT