இந்தியா

சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்?

DIN

புது தில்லி: சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்படவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல்க தெரிவித்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 223 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இதுவரை 5 பேர் இந்த  வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வியாழனன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது வரும் ஞாயிறன்று இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் அவசியன்றி வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.     

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்படவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல்க தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தநிறுவனம் வெளியிட்ட குறிப்பில், 'சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என்றும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT