இந்தியா

கரோனா பாதிப்புக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் 

DIN


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறையினருக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சருடன் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.

மேலும், கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய  மத்திய அரசு விரைவில் நிவாரணத் தொகை அறிவிக்கும்.

அதே சமயம், கால தாமதமாக கணக்குத்தாக்கல் செய்யும் பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 12%ல் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 5 கோடி கீழ் வருவாய் உள்ளவர்கள் தாமாக முன் வந்து கணக்கைத்தாக்கல் செய்யத் தேவையில்லை.

ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்ட 60 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 

தொழில்துறையினருக்கு வசதிக்காக சுங்கத் துறை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT