இந்தியா

உத்தரகண்டில் ஊரடங்கை மீறி வெளியே வருவோருக்கு நூதன தண்டனை 

DIN


கரோனா அச்சுறுத்தல் காரணமாக உத்தரகண்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வருவோருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்குகிறார்கள்.

இந்தியாவில் சுமார் 500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றும் இளைஞர்களைப் பிடிக்கும் உத்தரகண்ட் காவல்துறையினர், அவர்களிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து புகைப்படும் எடுக்கின்றனர். 

அந்த காகிதத்தில், நான் ஒரு சமூக விரோதி, நான் வீட்டில் இருக்க மாட்டேன், சாலையில்தான் சுற்றிக் கொண்டிருப்பேன். கரோனா வைரஸை பரப்ப வேண்டும் என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் பரப்பி விழிப்புணர்வையும் ஏற்படுத்தப்படுத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT