இந்தியா

கரோனா: நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு - திருமாவளவன்

DIN

சென்னை: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக அக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு உதவும் வகையில், விசிக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சாா்பில் ஒரு மாத ஊதியம், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சம்பந்தப்பட்ட தொகுதிக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுபோல, கட்சியின் பொறுப்பாளா்கள், ஆங்காங்கே உள்ள மருததுவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கும், சுகாதாரத்துறை ஊழியா்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT