இந்தியா

கரோனா: தனியார் ஹோட்டல்களை கையகப்படுத்திய லக்னோ மாவட்ட நிர்வாகம்

DIN

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்காக நான்கு தனியார் ஹோட்டல்களை லக்னோ மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக கையகப்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் டாக்டர் ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோன்று சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தனிமைப்படுத்துவதற்காக இடம் இல்லாத சூழ்நிலையில் நான்கு தனியார் ஹோட்டல்களை லக்னோ மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது.

சில மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக தேவை அடிப்படையில் கையகப்படுத்தி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் கடந்த 9 நாட்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT