இந்தியா

பிரதமரின் நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி பங்களிப்பு

DIN

பிரதமரின் நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசு துறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:

‘பிரதமா் நிதிக்கு பொதுத் துறை மற்றும் கூட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதலாக, பொதுத் துறை நிறுவன பணியாளா்கள் அவா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.61 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா் என்று தா்மேந்திர பிரதான் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே பொதுத் துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் ரூ.150 கோடியும், செயில் ரூ.30 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி பணியாளா்கள் ரூ.100 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல் இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமான வரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT