இந்தியா

கரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பலனளிக்கும்: ஆராய்ச்சி முடிவுகள்

DIN


கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஐஐடி தில்லி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக இது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) உயிரிதொழில்நுட்ப துறை தலைவர் டி.சுந்தர் கூறியதாவது: 

அஸ்வகந்தா மற்றும் தேனீ தயாரிக்கக் கூடிய பிசின் ஆகியவற்றின் சேர்மானம் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படக் கூடிய திறனைக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வக மற்றும் மருத்துவமனை ரீதியிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இந்தக் கண்டுபிடிப்பானது கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு ஆகும் நேரம் மற்றும் செலவை குறைப்பதற்கு உதவும். அத்துடன், கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தாகவும் இது பயன்படலாம். இந்த சேர்மானத்தை மருந்தாக தயாரிப்பதற்கு சிறிது காலம் ஆகலாம். 

இது எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவற்றின் இயற்கை அடிப்படையிலான தன்மைகள் சற்று வீரியமானவை என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று டி.சுந்தர் கூறினார். 

ஏற்கெனவே கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு மாற்றாக அஸ்வகந்தாவை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இதனை ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT