இந்தியா

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 39.62% ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

DIN

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

உலக அளவில் ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது. அதுவே, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.9 பேர் என்ற விகிதத்தில் கரோனா பரவி வருகிறது. அதேநேரத்தில் சுமார் 39.62% பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 2.94% பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும், 3% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 0.45% பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, உலக அளவில் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 4.2 பேர் என்ற நிலையில், இந்தியாவில் அது 0.2 என உள்ளது. 

தொடர்ந்து கரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. முதல் கட்ட ஊரடங்கின்போது 7.1% ஆக இருந்த மீட்பு விகிதம் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது 11.42% ஆகவும், தொடர்ந்து 26.59% ஆகவும் தற்போது 39.62% ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை முறையில் இது திருப்தி அளிப்பதாக உள்ளது' என்று தெரிவித்தார். 

முன்னதாக, நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,303 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT