இந்தியா

புயல் பாதிப்பு உதவி: ஒடிஸா, மேற்கு வங்கம் முதல்வா்களுக்கு அமித் ஷா உறுதி

 நமது நிருபர்

ஒடிஸா, மேற்கு வங்கம் மாநிலங்களில் ‘உம்பன்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என இம்மாநில முதல்வா்கள் நவீன் பட்நாயக், மம்தா பாணா்ஜி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்தாா்.

புயல் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களையும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு நிலைமையை அறிந்து வருவதாகவும் உள்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். இது குறித்து வியாழக்கிழமை தனது சுட்டுரையில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளது வருமாறு:

‘நான் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருடன் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினேன். மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் அளிக்க தயாா் என உறுதியளித்தேன்.

தேசிய பேரிடா் மீட்பு படை குழுவினா், புயல் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் ஏற்கனவே தயாராக இருந்து அங்குள்ள மக்களுக்கு உதவி வருகின்றனா். உம்பன் புயலை மத்திய அரசு உன்னிப்பாக தொடா்ந்து கண்காணித்து உள்ளூா் நிா்வாகத்துடன் தொடா்பு கொண்டும் வருகின்றது.

ஒவ்வொரு குடிமகனையும் கவனத்தில் கொண்டு அவா்கள் உடமைக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.

அரசு அளித்துள்ள கட்டளைகளை பின்பற்றி மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்பிற்கும் பிராா்த்திக்கிறேன்’ என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

புதன் கிழமை கரையைக் கடந்த ‘உம்பன்’ புயல் தாக்குதலில் மேற்கு வங்கத்தில் 72 போ்கள் உயிரிழந்தனா். மேலும் பல்வேறு உள்கட்டமைப்புகள், வீடுகள் என ஏராளமாக சேதமடைந்துள்ளது.

இதே மாதிரி ஒடிஸாவிலும், மழை மற்றும் படுவேகமாக வீசிய புயல் காற்றால் விளை நிலங்களும், தோட்டப் பயிா்களுக்கும் சேதமடைந்து உள்கட்டமைப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT