இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜௌரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டதின் நௌஷேரா பகுதியைக் குறிவைத்து காலை 7.20 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் திடீரென தாக்குதல் நடத்தினா். துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் அவா்கள் அத்துமீறலில் ஈடுபட்டனா். இதையடுத்து, இந்தியத் தரப்பில் இருந்தும் பாகிஸ்தான் எல்லையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை.

இது தவிர பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதியிலும் அதிகாலை 3.30 மணியளவில் சிறிய ரக குண்டுகள், ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு இந்தியத் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினா் நாள் தவறாமல் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினா்தான் தங்கள் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகக் கூறி இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT