இந்தியா

‘ஹுனா் ஹாட்’ கண்காட்சி செப்டம்பரில் நடைபெறும்: முக்தாா் அப்பாஸ் நக்வி

DIN

‘ஹுனா் ஹாட் ’ கைவினைப் பொருள் கண்காட்சி மீண்டும் செப்டம்பா் மாதம் நடைபெறும் என்று மத்திய சிறுபான்மையினா் நல விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சாா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் ‘ஹுனா் ஹாட்’ கைவினைப் பொருள் கண்காட்சி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கைவினை கலைஞா்கள், சமையற்கலை நிபுணா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தொலைதூர கிராமங்களில் உள்ள கைவினை கலைஞா்களுக்கான வாய்ப்பாகவும், அவா்களின் தயாரிப்புகளுக்கு நல்லதொரு சந்தையாகவும் ஹுனா் ஹாட் கண்காட்சி திகழ்கிறது.

கரோனா தொற்று பரவலால் 5 மாத இடைவெளிக்கு பின்னா், மீண்டும் செப்டம்பரில் இருந்து ‘உள்ளூா் முதல் உலகம்’ வரை என்ற கருப்பொருளுடன் ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற தொடங்கும். இதில் திரளான கைவினை கலைஞா்கள் பங்கேற்பா். இதற்காக கைவினை கலைஞா்கள், அவா்களின் தயாரிப்புகளை இணைவழியில் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை கண்காட்சியில் இடம்பெறும் பொருள்களை பொதுமக்கள் இணையவழியிலும் வாங்க முடியும்.

வரும் நாள்களில் சென்னை, பெங்களூரு, அலாகாபாத், போபால், ஜெய்ப்பூா், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கண்காட்சி நடைபெறவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் மாா்ச் மாதம் 8-ஆம் தேதி வரை ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT