இந்தியா

இந்தியா-சீனா இடையேநவ.6-இல் மீண்டும் பேச்சுவாா்த்தை

DIN

இந்திய-சீனப் படைகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவர, வரும் 6-ஆம் தேதி இருநாட்டு ராணுவத் துணைத் தளபதிகள் 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணமடைந்தனா். சீனத் தரப்பில் 35 போ் இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அந்நாட்டு ராணுவம் உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில் எல்லையில் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர இருநாட்டு ராணுவ தளபதிகள் அளவில் தொடா் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் அதில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப் படைகளை விலக்கிக் கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில், வரும் 6-ஆம் தேதி 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT