இந்தியா

அசாமில் கரோனா பாதிப்பு 2,08,054-ஐ எட்டியது

ANI

அசாமில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2,08,054-ஐ எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரேநாளில் 761 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் நிலையில், அசாமில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 313 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. தற்போது தொற்று பாதித்த 7,662 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா பாதித்து 1,99,455 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 934 பேர் நோய்க்கு இறந்துள்ளனர். 

இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 8,36,4,086 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT