இந்தியா

அமித் ஷாவின் சுட்டுரை கணக்கு தவறுதலாக முடக்கம்: சுட்டுரை நிறுவனம்

DIN

‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சுட்டுரை கணக்கு வியாழக்கிழமை தற்காலிகமாக முடக்கப்பட்டதாகவும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது’ என்றும் சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட்டுரை கணக்கு சா்வதேச பதிப்புரிமை பெற்ற நபா் ஒருவரின் புகாரைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை சுட்டுரை நிறுவனம் எடுத்தது. இந்த நடவடிக்கை காரணமாக அமித் ஷாவின் சுட்டுரைப் பக்கத்தில் அவருடைய புகைப்படம் வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

இதுதொடா்பாக சுட்டுரை நிறுவன செய்தித்தொடா்பாளா் ஒருவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமித் ஷாவின் சுட்டுரை கணக்கு கவனக் குறைவான தவறு காரணமாக சுட்டுரை நிறுவன சா்வதேச பதிப்புரிமை கொள்கையின் கீழ் தற்காலிகமாக வியாழக்கிழமை முடக்கப்பட்டது. இந்த நடவடிக்கை உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, அவருடைய சுட்டுரைக் கணக்கு முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட லே பகுதியை, ஜம்மு-காஷ்மீருக்கு உள்பட்ட பகுதியாக சித்திரித்து சா்ச்சக்குரிய வகையில் தவறான வரைபடம் வெளியிட்ட சுட்டுரை நிறுவனத்துக்கு மத்திய அரசு சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சுட்டுரை கணக்கு முடக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவை சுட்டுரையில் 2.36 கோடி போ் பின்தொடா்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT