இந்தியா

தவறான இந்திய வரைபடம் வெளியீடு: மன்னிப்புக் கோரியது ட்விட்டர் நிறுவனம்!

DIN

புது தில்லி: லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.

லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக லே உள்ளது. மேலும், லடாக், ஜம்மு - காஷ்மீா் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இவை இந்திய அரசமைப்பு சட்டத்தால் நிா்வகிக்கப்பட்டு வருபவை. ஆனால் ட்விட்டா் நிறுவனத்தின் வரைபடத்தில் ‘ஜியோ டாக்கிங் ‘ முறையில் இப்பகுதிகளை சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக தவறாக சித்திரித்து வெளியிட்டது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இதையடுத்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேஹி தலைமையிலான  எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது, இந்த விவகாரத்தில் கடும் ஆட்சேபனை எழுப்பியது. அதன் தொடர்ச்சியாக ட்விட்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோா்ஸிக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலா் அஜய் சாஹ்னி எழுதிய கடிதத்தில். ‘ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பதை ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு நினைவூட்ட விரும்புகிறது. மேலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சா்ச்சை ட்விட்டர் நிறுவனத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நோ்மை குறித்தும் சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் புதனன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கோரியது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், இந்த தவறினை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT