இந்தியா

விரைவில் தரவுப் பாதுகாப்பு சட்டம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

DIN

நாட்டில் விரைவில் தரவுப் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கர்நாடக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய அவர்,“தரவுப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மையமாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொற்றுநோய் காலத்தின்போதும் கூட தகவல் தொடர்புத் துறை ஏழு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டதாகவும், முக்கிய உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மேலும், “இந்தியா மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தரவுகளை உருவாக்கும் மையமாக உள்ளது. நாட்டில் மிக விரைவில் தரவுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்” என ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

கமல்ஹாசன் பொறாமைப்படும் விஷயம் எது?

சாய் பல்லவி பிறந்தநாளில் சிறப்பு விடியோ வெளியிட்ட படக்குழு!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை கோரிய மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஹஜ் புனித பயணம் தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்ட முதல் குழு!

SCROLL FOR NEXT