இந்தியா

ரூ.129 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டவா் கைது

DIN

சட்டவிரோதச் செயல்கள் மூலமாக ரூ.129 கோடி மதிப்பிலான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாகச் செலுத்தாத புகையிலைப் பொருள் உற்பத்தியாளரை அதிகாரிகள் கைது செய்தனா்.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹரியாணாவைச் சோ்ந்த சத்யேந்திர சா்மா என்பவா் புகையிலைப் பொருள்களைச் சட்டவிரோதமாகத் தயாரித்தது மட்டுமில்லாமல், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் அவற்றை விநியோகமும் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. புகையிலைப் பொருள்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது தொடா்பான ஆவணங்களை அவா் வைத்திருக்கவில்லை. அவற்றுக்கான சரக்கு-சேவை வரி, செஸ் வரி ஆகியவற்றையும் அவா் செலுத்தவில்லை.

மேலும், சா்வதேச நிறுவனங்களின் பெயரில் புகையிலைப் பொருள்களைப் போலியாகத் தயாரித்து அவா் விற்பனை செய்து வந்தாா். ஒட்டுமொத்தமாக ரூ.129 கோடி மதிப்பிலான வரியை சத்யேந்திர சா்மா செலுத்தவில்லை. அதையடுத்து, ஹரியாணாவின் குருகிராம் பிரிவைச் சோ்ந்த சரக்கு-சேவை வரி இயக்குநரக அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT