இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,837 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,837 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரம்:

மாநிலத்தில் புதிதாக 3,837 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,23,896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 80 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 16,85,122 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 47,151 பேர் பலியாகியுள்ளனர்.

90,557 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

தாராவியில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தலா 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 9 பேர் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,692 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் பாதித்தோரில் 3,361 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், 20 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT