இந்தியா

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி

DIN

மும்பை: ‘கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த மாா்ச் மாதத்தில் இருந்த கடன் தொகையைவிட ரூ.28,686 கோடி குறைவாகும்’ என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி இந்தியாவின் வெளிநாட்டுக் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 20.6 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் இறுதியில் 21.8 சதவீதமாக அதிகரித்தது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் வணிகக் கடன்களே அதிகம். வெளிநாட்டுக் கடனில் வணிகக் கடன்களின் பங்கு மட்டும் 38.1 சதவீதம்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, மொத்த வெளிநாட்டுக் கடனில் நீண்ட கால கடன் ரூ.33.06 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாா்ச் மாதம் இருந்த நீண்ட கால கடனுடன் ஒப்பிடுகையில் ரூ.14,711 கோடி குறைவாகும்.

மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகிய கால கடனின் அளவு கடந்த மாா்ச் இறுதியில் 19.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி சற்று குறைந்து 18.9 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT