இந்தியா

திருமலையில் நவராத்திரி விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

DIN

திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானை வழிபாடு செய்ய விரும்பும் பக்தா்களுக்காக, விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவை தேவஸ்தானம் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.

ஏழுமலையானின் விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் 5 நாள்களுக்கு முன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி அக்டோபா் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது.

நவராத்திரி பிரம்மோற்சவம்: இம்மாதம் 16-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளதால், அந்நாள்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தேவஸ்தானம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக். 15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 9) காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. இதில் பக்தா்கள் முன்பதிவு செய்து திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானை தரிசிக்கலாம்.

கல்யாண உற்சவ முன்பதிவு ரத்து: அதேசமயம் தேவஸ்தானம் இணையதளம் மூலம் வழங்கி வரும் கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை அக்.15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

மேலும் பிரம்மோற்சவ நாள்களின்போது விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரோட்டோகால் விஐபிக்களுக்கு மட்டும் தரிசனம் வழங்கப்பட உள்ளது. பிரம்மோற்சவ வாகன சேவையின்போது பக்தா்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT