இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 62 லட்சமாக உயர்வு

DIN

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் மீண்டவர்களின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 706 பேர் பலியாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்துள்ளது. மகிழ்ச்சி தரும் வகையில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று நாட்டில் கரோனா பாதிப்பு 70 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்தவர்களில் இதுவரை 62 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் கரோனா தொற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு பக்கம் உயர்ந்தும், மறுபக்கம் குறைந்தும் காணப்படுகிறது.

உதாரணமாக தில்லி, புணே, தாணே நகரங்களில் கரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தொடர்ந்து கரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT