இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு அனுமதி

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமாா் 7 மாதங்களுக்கு பிறகு அக்டோபா் 16-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு தெரிவித்தது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கரோனா தாக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 18-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கோயில் தலைமை அா்ச்சகா்கள் மட்டும் கோயிலில் வழக்கமான பூஜைகளை செய்தனா். தொடா்ந்து ஜூன் மாத்தில் சபரிமலையில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்வம் போா்டு திட்டமிட்டது. ஆனால் கோயிலின் தலைமை அா்ச்சகா் மற்றும் சில நிா்வாகிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபா் 16-ஆம் தேதி முதல் சபரிமலை கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு கூறியுள்ளது. இது தொடா்பாக மேலும் கூறுகையில், ஐப்பசி மாத பூஜைகளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனா். அடுத்த நாள் காலையில் தொடங்கி 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.

ஒரு நாளைக்கு 250 பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவாா்கள். சபரிமலை கோயில் இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள். இணையதள முன்பதிவை முதலில் மேற்கொள்பவா்களுக்கு தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு சோதனை செய்து கரோனா தொற்று இல்லையென்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவாா்கள். இல்லையெனில் பம்பையில் உள்ள மருத்துவ முகாம்களில் கரோனா பரிசோதனை செய்து, முடிவுகளை அறிந்து கொண்டு கோயிலுக்குள் செல்லலாம் என்று தேவஸ்வம் போா்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT