இந்தியா

பெருநிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜக

ENS

புது தில்லி: கடந்த 2018 - 19 ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரூ.876.10 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளன.

அதில் ஒரு பெரும் தொகையை அதாவது 1573 பெரு நிறுவனங்களிடம் இருந்து ரூ.698.082 கோடியை நாட்டை ஆளும் கட்சியான பாஜக பெற்றுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், 122 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.122.5 கோடியை நன்கொடையாகப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.  

இதற்கு அடுத்த இடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 17 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.11.345 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

2018 - 19ஆம் நிதியாண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதுதான் பெரு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் அதிகளவில் நன்கொடையைப் பெற்றுள்ளன. இதற்கு முன்பு 16வது மக்களவைக்கு தேர்தல் நடைபெற்ற 2014 - 15-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் ரூ.573.18 கோடியை நன்கொடையாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2018 - 19-ஆம் ஆண்டில்  பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளைதான் அதிக நன்கொடையை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் மூன்றுக்கும் ஒரே ஆண்டில் நன்கொடை அளித்த மொத்த மதிப்பு ரூ.455.15 கோடியாகும்.

இதில், பாஜகவுக்கு ரூ.356.535 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.55,629 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.42.986 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில், ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில் ரூ.20.54 கோடி அளவுக்கு எந்த பதிவும் செய்யப்படாத, இணையத்தில் விவரங்கள் கூட கிடைக்காத, அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை என்வென்று கூட அறியாத நிறுவனங்களின் பெயர்களில் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT