இந்தியா

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவு

DIN

காந்தி நகர்: குஜராத் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான கேசுபாய் படேல் (92) உடல்நலக்குறைவால் வியாழனன்று காலமானார்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, வியாழன் மாலை அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் படேல் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குஜராத்தில் ஆரம்ப கட்டத்தில் பாஜகவை வளர்க்க கடுமையாக உழைதவரான படேல் ஆறு முறை எம்.எல்.ஏவாகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் 1995-ஆம் ஆண்டு மற்றும் 1998-2001 ஆகிய இரண்டு காலகட்டங்களில் குஜராத் மாநில முதல்வராக பணியாற்றினார். அவர் பதவி விலகியவுடன் மோடி குஜராத் முதல்வராகப் பதவி எற்றார் எனபது குறிப்பிடத்தக்கது.

2012-ஆம் ஆண்டு கட்சித் தலைமையுடன் முரண்பட்டு தனிக்கட்சித் துவங்கிய அவர், பின்னர் 2014-ஆம் ஆண்டு தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்து விட்டார்.

அவரது மறைவிற்கு குஜராத் முதல்வர் ரூபாணி, மத்திய உள்துறை அமைச்சர் ராநாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT