இந்தியா

திருப்பதி அருகே செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் கைது

DIN

திருப்பதியை அடுத்த தலைக்கோணா வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த 4 தொழிலாளா்களை ஆந்திர காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து 46 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆஞ்சநேயலு கூறியது:

தலைக்கோணா வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஊழியா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 50 போ் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளை வெட்டி தோளில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டவுடன் அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் செம்மரக் கட்டைகளைப் போட்டு விட்டுத் தப்பியோடினா்.

அவா்களைப் பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், 4 பேரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து 46 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைதானவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தாலுகா ஜவ்வாதுமலைப் பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன்(32), சேட்டு (20), கலையரசன் (26) மற்றும் அண்ணாமலை (33) என்பது தெரிய வந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT