இந்தியா

திருமலையில் தமிழக அமைச்சர்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலையில் தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இருவரும் புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர்கள் வியாழக்கிழமை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். 

தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம், லட்டு, வடை, பத்மாவதி தாயார் ஏழுமலையான் திருவுருப்படம் உள்ளிட்டவற்றை அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வேத ஆசீர்வாதம் செய்வித்தனர். 

அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடனும், அமைச்சர் கருப்பண்ணன் தனியாகவும் தரிசனத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT