இந்தியா

அரசு பணியிடங்களை நிரப்பத் தடையில்லை: நிதியமைச்சகம் விளக்கம்

DIN

அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கட்டுப்பாடோ, தடையோ விதிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக, நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிா்க்கட்சிகளிடம் இருந்து எதிா்ப்புகள் வந்தன.

இதையடுத்து, நிதியமைச்சகம் தனது நிலைப்பாட்டை விளக்கி புதிய சுற்றறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பணியாளா் தோ்வாணையம்(எஸ்.எஸ்.சி.), குடிமைப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே பணியாளா் நியமன வாரியம்(ஆா்ஆா்பி) போன்றவை எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் பணியிடங்களை நிரப்புவது தொடரும். செலவினத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை, புதிய பணியிடங்களை உருவாக்குவது தொடா்பாக அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டதாகும். இதனால், காலிப் பணியிடங்களை நிரப்புவது பாதிக்கப்படாது. அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கட்டுப்பாடோ, தடையோ விதிக்கப்படவில்லை என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT