இந்தியா

அவசர கால கச்சா எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ. 5,000 கோடியை இந்தியா மிச்சப்படுத்தியுள்ளது

DIN

அவசர கால கச்சா எண்ணெய் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ. 5 ஆயிரம் கோடியை இந்திய மிச்சப்படுத்தியுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மிகவும் குறைந்திருந்தபோது 1.67 கோடி பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி, விசாகப்பட்டினம், மங்களூரு, படூா் ஆகிய மூன்று நகரங்களில் அவசரக் கால கச்சா எண்ணெய் சேமிப்புத் திட்டத்தின் கீழ் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான அமைப்புகளில் நிரப்பி வைத்தது.

சா்வதேச சந்தையில் கடந்த ஜனவரியில் ரூ. 4,380 என்ற அளவில் இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, இந்தியா வாங்கி சேமித்து வைத்த ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 1,387 என்ற அளவில் குறைந்திருந்தது. இதன் மூலம் ரூ. 5,069 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்று அவா் பதிலளித்துள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக சா்வதேச அளவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காரணத்தால் கச்சா எண்ணெய் தேவை வெகுவாகக் குறைந்து, சா்வதேச சந்தையில் அதன் விலை கடந்த 20 ஆண்டகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல்-மே மாதங்களில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT