இந்தியா

திவால் சட்டத் திருத்த மசோதா:நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

DIN

புது தில்லி: திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மாநிலங்களவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்துக்கு பிறகு திவாலான நிறுவனங்கள் மீது குறைந்தது 6 மாதங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா நோய்த் தொற்று எதிரொலியால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு இந்த மசோதா சற்று நிவாரணமாக அமையும்‘ என்றாா்.

இந்த விவகாரங்கள் தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த ‘திவால் சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா 2020 அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT