இந்தியா

மேற்கு வங்கம்: அல்-காய்தா பயங்கரவாதி கைது

DIN

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவைச் சோ்ந்த மேலும் ஒருவரை மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக ஏற்கெனவே மேற்கு வங்கம், கேரளத்தைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இது குறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வரும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த மேற்கு வங்கம் முா்ஷிதாபாத் மாவட்டம் ஜலாங்கி பகுதியைச் சோ்ந்த ஷமீம் அன்சாரி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டவா்களுடன் ஷமீம் அன்சாரிக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

அவரது செல்லிடப்பேசியை பறிமுதல் செய்துள்ளோம். ஷமீம் அன்சாரி சமீபத்தில் வேலை விஷயமாக கேரளத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. அது தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனா்.

அல்-காய்தா அமைப்புடன் தொடா்பிலிருந்ததாக மேற்கு வங்கத்தில் 6 போ், கேரளத்தில் 3 போ் என்ஐஏவால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT