முகப்பு
இந்தியா

அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி

அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:44 am IST
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கட்டடம் முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் வன்முறை கண்டனத்திற்குரியது. சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது. ஒழுங்கான மற்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments