ஒரே மேடையில் 2 காதலிகளை திருமணம் செய்த சத்தீஸ்கர் இளைஞர்
பொதுவாக திருமணம் என்றால் பல விஷயங்கள் அது பற்றி பேசப்படும். மணப்பெண் அலங்காரம், அறுவை உணவு. ஆனால் இங்கே திருமணமே பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் பல விஷயங்கள் அது பற்றி பேசப்படும். மணப்பெண் அலங்காரம், அறுவை உணவு. ஆனால் இங்கே திருமணமே பேசுபொருளாக மாறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் மாவட்டத்தில், ஒரே மேடையில் தனது இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர்.
தன்னை மனதாரக் காதலித்த ஹசினா மற்றும் சுதாரி ஆகியோரை ஒரே மேடையில், இருவரின் சம்மதத்துடன் ஜனவரி 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார் சந்து மௌரியா என்ற இளைஞர்.
Advertisement
Advertisement
விவசாயியான சந்து மௌரியா, ஒரே மண்டபத்தில், ஒரே மேடையில், ஒருபோல சடங்குகள் செய்து இருவருக்கும் தாலி கட்டியுள்ளார்.
கிராமத்தில் விவசாயப் பணியின் போது சுதாரியாவும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹசினாவும் சந்துவைப் பார்த்து காதலில் விழுந்துள்ளனர். இது ஒருவருக்கு ஒருவர் தெரிய வந்ததும் மனமொத்து மூன்று பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மூன்று பேரின் வீட்டாரும் சம்மதித்து திருமணத்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மூன்று பேரின் பெயரையும் அச்சிட்டு திருமணப் பத்திரிகை உறவினர்களுக்கு அளிக்கப்பட்டு பல நூறுபேர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.