முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதானால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 8 ஜனவரி 2021, 12:14 pm IST
வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்
பகிர்:

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதானால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தில்லியில் 44-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 8-வது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

ஏற்கனவே 7 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 8) மீண்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி பல்வீந்தர் சிங் ராஜூ, ''பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதாக இருந்தால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரட்டும்'' என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியிn பல்வேறு எல்லைகளில் 44-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments