முகப்பு
இந்தியா

கேரள பேரவைத் தலைவருக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்: காவல்துறை விரட்டியடிப்பு

கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 8 ஜனவரி 2021, 4:21 pm IST
கேரள பேரவைத் தலைவருக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்: காவல்துறை விரட்டியடிப்பு (கோப்புப்படம்)
பகிர்:

கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள சட்டப்பேரவை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.

கேரள சட்டப்பேரவையின் 22-வது பேரவைக் கூட்டம் இன்று (ஜன.8) தொடங்கியது. இதில் ஆளுநரின் உரையின்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

Advertisement

Advertisement

இதனிடையே ஐக்கிய அரபு அமீரக தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால், காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments