தெற்கு தில்லியில் கட்டடம் சரிந்து ஒருவா் சாவு
தெற்கு தில்லி சரிதா விஹாரில் அடுக்குமாடி கட்டடம் வியாழக்கிழமை சரிந்து விழந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் காயமடைந்தனா்.
புது தில்லி: தெற்கு தில்லி சரிதா விஹாரில் அடுக்குமாடி கட்டடம் வியாழக்கிழமை சரிந்து விழந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘மூன்று அடுக்கு கட்டடத்தில் உள்ள மொட்டை மாடியில் வெல்டிங் வேலை நிடைபெற்றுள்ளது. அப்போது, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இதுதொடா்பான தகவல் வியாழக்கிழமை பகல் 12.05க்கு வந்தவுடன் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. அப்போது காயமடைந்த வீட்டின் உரிமையாளா் ஹரீஷ் ரோட்டேலா, காலில், சிவம் ஆகியோா் மூவா் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் தரம்பீா் என்பவா் இடிபாடுகளில் சிக்கி இருந்தது மீட்புப் பணியின்போது தெரியவந்தது.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.