முகப்பு
இந்தியா

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 5 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 8 ஜனவரி 2021, 1:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், போலி மதுபான விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) செயல்படுத்துமாறு அவர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே ஜீத்கரி  கிராமத்தில் போலி மதுபான விற்பனையைத் தடுக்கத் தவறியதாக சிக்கந்தராபாத் காவல் நிலைய ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments