மாா்ச்-ஜூலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: கட்டணத்தை திரும்பப் பெற கூடுதல் அவகாசம்
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் கட்டணத்தை திரும்பப் பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் கட்டணத்தை திரும்பப் பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் கடந்த மாா்ச் 21 முதல் ஜூலை 31 பயணம் செய்ய கவுண்டா்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் பணத்தைத் திரும்பப் பெற 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அவகாசம் 9 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது. இதன்படி அந்த காலகட்டத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் பயணம் செய்வதாக இருந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் வரையிலான அவகாசத்துக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இதற்கான விண்ணப்பத்துடன் ரயில்வேயால் அளிக்கப்பட்ட அசல் டிக்கெட்டையும் அளிக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.